Translate


Mars Planet in Tamil
Mars Planet in Tamil


ஹாய் பிரண்ட்ஸ்:

           விண்வெளியில் செக்கச் செவேலென்று அழகாய் தெரியும் கிரகம்தான் செவ்வாய். இக்கிரகம் எல்லா நாகரிகங்களிலும் இடம்பெற்றுள்ளது. எடுத்துக்காட்டாக எகிப்து  காலத்தில் இதனை "HER DESHER" என்று அழைப்பர். அதற்கு அர்த்தம் சிவந்த ஒன்று ஆகும்.

ஏன் இந்த பெயர்?

           இக்கிரகத்திற்கு ரோம கடவுளின் பெயரைச் சூட்டினார். இக்கிரகம் மிகவும் சிவப்பாக இருப்பதால் ரோம கடவுளின் போர் கடவுளான மார்ஸ் (MARS) என்னும் கடவுளின் பெயரைச் சூட்டினர்.

ஏன் அந்த சிவப்பு?

About Mars in Tamil
About Mars in Tamil

           அக்கிரகம் அதிக சிவப்பாக இருப்பதற்குக் காரணம் அங்கு அதிகமான இரும்புத் தாது பொருட்கள் துருபிடித்து உள்ளதால் அக்கிரகம் அதிக சிவப்பாய் தெரிகிறது.

செவ்வாயில் நீர்:

           அதன் வளிமண்டலம் மிகவும் அடர்த்தி குறைவாகவே உள்ளதால் அதன் நிலப்பரப்பில் நீர் இருக்க வாய்ப்பே இல்லை. பல கோடி வருடங்களுக்கு முன்னாடி செவ்வாயில் நீர் இருந்திருக்கலாம் என சில விஞ்ஞானிகள் யூகிக் கின்றனர்.

அளவு:

mars in tamil
mars in tamil

           நம் சூரிய குடும்பத்திலேயே செவ்வாய் தான் இரண்டாவது மிகச் சிறிய கிரகமாகும். பூமியின் விட்டத்தை காட்டிலும் செவ்வாயின் விட்டம் பூமியின் பாதியே இருக்கும். இருந்தாலும் பூமியின் நிலப்பரப்பை மட்டும் எடுத்துக்கொண்டால் பூமியின் நிலப்பரப்பும் செவ்வாயின் நிலப்பரப்பும் ஒரு அளவே உள்ளது.

மிகப்பெரிய மலை:

           சூரிய குடும்பத்திலேயே செவ்வாயில் தான் மிகப்பெரிய மலை உள்ளது. சூரிய குடும்பத்திலேயே உயரமான மலையின் பெயர் ஒலிம்பஸ் மொன்ஸ் (OLYMPUS MONS). இதன் உயரம் மட்டுமே 27 கிலோமீட்டர் இருக்கும். பூமியில் உள்ள (MOUNT EVEREST) என்னும் மலையை மூன்று முறை மேலுக்கும் மேல் அடுக்கி வைத்தால் தான் இந்த உயரம் வரும்.

ஆளமான பள்ளதாக்கு:                                                            

           அதுபோல் சூரிய குடும்பத்திலேயே ஆழமான பள்ளத்தாக்கு இக்கிரகத்திலேயே தான் உள்ளது. அதன் பெயர் தான் VALLES MARINERIS. அதன் ஆளம் மட்டுமே பத்து கிலோமீட்டர் இருக்கும். அதன் பின் அதே ஆளத்தில் கிழக்கிலிருந்து மேற்கு திசை நோக்கி 4,000 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது.

மிகப்பெரிய எரிமலை:

           இக்கிரகத்திலேயே தான் மிகப்பெரிய எரிமலையும் உள்ளது. ஒலிம்பஸ் மொன்ஸ் (OLYMPUS MONS) தான் மிகப்பெரிய எரிமலையும் ஆகும். இதன் விட்டம் 600 கிலோ மீட்டருக்கு இருக்கும்.

செவ்வாயில் உயிரினம்:

mars in tamil
Mars tamil

           செவ்வாயின் நிலத்தடியில் மற்றும் பள்ளத்தாக்கிலும் நீர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டது. அதனை 2018 ஆராய்ந்தபோது அங்கு கண்களுக்குத் தெரியாத உயிரினங்கள் தோன்றி இருக்கலாம் என விஞ்ஞானிகள் யூகித்தனர்.

குளிரும் செவ்வாய்:

           இக்கிரகத்தின் தென் துருவம் மற்றும் வட துருவத்தில் பனிக்கட்டிகள் உறைந்து உள்ளது. பூமியைக் காட்டிலும் செவ்வாய் கிரகம் மிகக் குழுமையாக உள்ளது ஏனென்றால் சூரியனிடமிருந்து தொலைவில் அமைந்துள்ளதால் அது மிகவும் குளூமையாக உள்ளது. சராசரியாக -60 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்கும்.

செவ்வாயின் வளிமண்டலம்:

           கார்பன் டையாக்சைட் ஆல் (CARBON DI-OXIDE) செய்யப்பட்ட அதன் வளிமண்டலம் பூமியின் வளி மண்டலத்தை விட 100 மடங்கு அடர்த்தி குறைவாகவே உள்ளது.

மணல் புயல்கள்:

Mars planet images
Mars planet images

           சூரிய குடும்பத்திலேயே செவ்வாயில் தான் பெரிய பெரிய மணல் புயல் வரும். அப்புயல்கள் அம்முழூ கிரகத்தயே சூளும் அளவிற்கு பெரிதாக இருக்கும். இவ்வாறு வரும் புயல்கள் மாதக் கணக்கில் நீண்டு இருக்கும்.

செவ்வாயின் கோணம்:

           பூமியைப் போலவே செவ்வாயும் சிறிதளவு மட்டுமே சாய்ந்து சுற்றுகிறது. இவ்வாறு சாய்டு சுற்றுவதால் செவ்வாயிலும் பருவங்கள் வருகிறது.

வாயுவின் அளவு:

           செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் 95.32% சதவீதம் கார்பன்டை ஆக்சைடை(CARBON DI-OXIDE), 2.7% சதவீத நைட்ரஜன் (NITROGEN), 0.13% சதவீதம் ஆக்சிஜேன் (OXYGEN) மீதம் முழுவதுமாக மற்ற வாயுக்களால் நிரம்பி உள்ளது.

காந்தபுலம்:

           இப்போது செவ்வாய் கிரகத்தில் காந்த புலமே இல்லை. ஆனால் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்ட சில இடங்களில் காந்தப்புலம் இருந்தது அது பூமியின் காந்தப்புலத்தை விட பத்து மடங்கு அதிகமாக இருந்தது.

செவ்வாயின் நிலவுகள்:

Mars Moons
Mars Moons

 செவ்வாய்க்கு இரண்டு நிலவுகள் உள்ளது. அது போபோஸ் (PHOBOS) மற்றும் டிமோஸ் (DEIMOS) ஆகும். இவ்விரு நிழவுகளும் நம் பூமியின் நிலவை விட சிறியதாகவே இருக்கும்.

ஆராய்ச்சி மற்றும் விண்கலங்கள்:

 கிரகத்திற்கு நிறைய செயற்கைக் கோள்கள் மற்றும் விண்கலங்கள் சென்றது அதில் மிகவும் குறைவானதே தோல்வியை சந்தித்தது.

 இப்போதுகூட செவ்வாயில் உயிரினங்கள் தோன்றி இருக்கலாம் யார் அறிவர் எதிர்காலத்தில் அறியலாம். 

 

Post a Comment

This is for Space and Science Lovers

أحدث أقدم