Translate

Neptune Planet in Tamil
Neptune Planet in Tamil

ஹாய் பிரண்ட்ஸ்: 

          சூரியனிடமிருந்து எட்டாவதாக உள்ள கிரகம் தான் நெப்டியூன் (NEPTUNE).

கண்டறிதல்:

           இக்கிரகம் செப்டம்பர் 23,1846 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். யூரேனஸ் கிரகத்தின் சுற்றுப்பாதையில் உள்ள குளறுபடியை ALEXIS BOUVARD கண்டறிந்து அதற்குப் பின் ஒரு கிரகம் உள்ளது என யூகித்தார். அதற்குப் பின் வந்த JOHANN GALLIE என்னும் விஞ்ஞானி தொலைநோக்கியில் பார்க்கும் பொழுது நெப்ட்யூன் கிரகத்தை கண்டறிந்தார்.

பெயர் சூட்டுதல்:

           எல்லா கிரகத்தின் பெயரை போலவே இக்கிரகத்திற்கும் கடவுளின் பெயரைச் சூட்டினார். ரோம கடவுளின் கடலின் கடவுளான நெப்டியூனின்   பெயரை சூட்டினர்.

ஆராய்ச்சி:

           இக்கிரகத்திற்கு VOYAGER 2, 1989 ஆம் ஆண்டு செல்லும் போது படம்பிடித்துள்ளது. அடுத்து இக்கிரகத்தை தொலைநோக்கியை வைத்தே ஆராய்ந்தனர். இக்கிரகத்தைப் பற்றி இன்னும் நிறைய மர்மங்கள் நிறைந்துள்ளது.

மையப்பகுதி:

           பூமியை போலவே நெப்டியூனின் மையப்பகுதியில் கற்களால் ஆனதே ஆகும். ஆனால் நெப்டியூனின் மையப்பகுதி மிகவும் அடர்த்தியாக உள்ளது. அதனால் இங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு இல்லை. 

 
Neptune Planet Tamil
Neptune Planet Tamil

ஏன் நீல நிறம்?

           நெப்டியூன் கிரகத்தின் மேகங்களில் நமக்குத் தெரியாத தாதுப் பொருள் ஒன்று இருக்கிறது. அது சூரிய ஒளியை நீல நிறத்தில் பிரதிபலிக்கிறது. மேலும் இக்கிரகம் பனியினால் உருவானதே ஆகும். அதனாலும் இக்கிரகம் நீல நிறத்தில் இருக்கிறது. 

எடை:

          நெப்டியூன்  கிரகம் பூமியை விட 17 மடங்கு அதிக எடையில் உள்ளது. பூமியின் நிறையை விட நெப்டியூனின் நிறை 750 மடங்கு அதிகமாக உள்ளது. நெப்டியூனின் மையப் பகுதி மட்டுமே பூமியின் முழு எடையைவிட அதிகமாக இருக்கும்.

அதிவேக காற்றி:

          என்னதான் இக்கிரகம் சூரியனிடம் இருந்து மிகத் தொலைவில் இருந்தாலும் இக்கிரகத்திலும் அதி வேகமான காற்று வீசுகிறது. இதன் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 2400 கிலோ மீட்டர் தூரம் செல்லும். இக்கிரகம் தான் சூரிய குடும்பத்திலேயே அதி வேகமான காற்று வீசும் இடமாகும்.

THE GREAT DARK SPOT:

          இக்கிரகத்தில் மிகப்பெரிய சூறாவளி உள்ளது. அதன் பெயர் தான் THE GREAT DARK SPOT. இது கடிகாரம் சுற்றும் திசைக்கு மாறாக சுற்றுகிறது. இது மொத்த பூமியையும் தனக்குள் அடங்கும் அளவிற்கு பெரிதாக இருக்கும். 


Neptune Planet
Neptune Planet

மறையும் மற்மம்:

          ஆனால் அடுத்து HUBBLE TELESCOPEயை வைத்து பார்க்கும் போது அது மறைந்து விட்டது. அடுத்து சில வருதங்களுக்கு ஒரு முறை வந்து வந்து மறைந்தது. இப்பொழுதும் கடைசியாக 2018இல் ஒன்றைக் கண்டறிந்தனர்.

காந்தபுலம்:

           நெப்டியூனின் காந்தப்புலம் பூமியின் காந்தப்புலத்தை விட 27 மடங்கு அதிகமாக உள்ளது. நெப்டியூனின் காந்தப்புலம் அது சுற்றும் பாதையில் இருந்து 47 டிகிரி விலகி உள்ளது.

தொலைவு:

           நெப்டியூனில் ஒரு நாள் என்றால் அது வெறும் 16 மணி நேரமே ஆகும். நெப்டியூன் சூரியனிடமிருந்து சராசரியாக 40 கோடி கிலோ மீட்டர் தள்ளி உள்ளது. இது பூமியை விட 30 மடங்கு அதிக தொலைவு ஆகும். சூரிய குடும்பத்திலேயே இக்கிரகத்தை தான் வெறும் கண்களால் காண முடியாது.

           நெப்டியூன் கிரகம் சூரியனை சுற்றிவர 165 பூமியின் வருடங்களை எடுத்துக் கொள்ளும். இக்கிரகத்தை கண்டறிந்ததிலிருந்து சூரியனை வெறும் ஒரு முறை மட்டுமே வலம் வந்து உள்ளது.


நெப்டியூன் கிரகம்
நெப்டியூன் கிரகம்

கலவை:

           இதன் வளிமண்டலத்தில் 80% HYDROGEN, 19% HELIUM, 1.5% METHANE உள்ளது. நெப்டியூன் கிரகத்தில் 25% பாறைகளாகவும், 60 லிருந்து 70 சதவீதம் பனிகட்டிகளாகவும், 5 லிருந்து 15 சதவீதம் HYDROGEN மற்றும் HELIUM வாயுகளாக உள்ளது.

நிலவுகள்:

           நமக்குத் தெரிந்தவரை நெப்டியூன் கிரகத்திற்கு பதினான்கு(14) நிலவுகள் உள்ளது. அதில் TRITON என்னும் நிலவுதான் பெரிதாக இருக்கும். இன்னிலவு நெப்டியூன் கிரகம் சுற்றுவதற்கு எதிர்மாறாக சுற்றிவருகிறது.

TRITON:

           நிலவில் எரிமலைக்குழம்பிற்கு பதிலாக பனிக்கட்டிகள் வெடித்து சிதறுகிறது. அவ்வளவு குளுமையான நிலவு தான் இது.


Titan Moon
Titan Moon

வளையங்கள்:

           நெப்டியூன் கிரகத்திற்கும் வளையம் உள்ளது. இவ்வளையங்கள் ஒரே அடுக்கில் இல்லாமல் அங்கும் இங்குமாக சிதறி உள்ளது. அதற்கு காரணம் இவ்வளையமும் சிறிது காலத்திற்கு முன்னாடி தான் உருவானதாகும். 2005 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இவ்வளையம் நிலையற்றது என கண்டறிந்தனர். 

இக்கிரகத்தில் எப்படி இவ்வளவு வேகமாக காற்று வீசுகிறது மற்றும் எப்படி இவ்வளவு பலமான காந்தப்புலம் உள்ளது என பல குழப்பங்கள் உள்ளது. இன்னும் இக்கிரகம் புரியாத புதிராகவே இருந்து வருகிறது...  


Post a Comment

This is for Space and Science Lovers

Previous Post Next Post