Translate

யூரேனஸ் அற்புதம்- Uranus Planet in Tamil
 யூரேனஸ் அற்புதம்- Uranus Planet in Tamil


ஹாய் பிரண்ட்ஸ்: 

          சூரியனிடமிருந்து ஏழாவதாக உள்ள கிரகம் தான் URANUS.வாயுகளால் ஆன கிரகங்களில்  URANUS தான் முதன்முதலாக கண்டெடுக்கப்பட்ட கிரகமாகும். இக்கிரகத்தை வெறும் கண்களால் காணமுடியும். நம் முன்னோர் இக்கிரகத்தை ஒரு நட்சத்திரம் என்று நினைத்தனர். URANUS  கிரகம் மெதுவாக சுற்றுவதநாளும் மங்கலாக தெரிவதாலும் இக்கிரகத்தை ஒரு நட்சத்திரம் என்று நினைத்தனர்.

கண்டறிதல்:

           இக்கிரகம் மிகவும் சாய்வாக உள்ளது. அதனால் அதன் தென்துருவம் மற்றும் வடதுருவம் சூரியனை பார்க்கும்படி உள்ளது. இக்கிரகம் மார்ச் 13,1781 ல்  WILLIAM HERSCHEL என்பவர் இக்கிரகத்தை கண்டறிந்தார். இவர் தொலைநோக்கி மூலம் பார்க்கும்போது வெறும் கண்களை வைத்துப் பார்ப்பதை விட பத்து மடங்கு குறைவான வெளிச்சத்தை வைத்து காணும்போதுதான்  URANUS என்னும் கிரகத்தை கண்டறிந்தார்.

பெயர் சூட்டுதல்:

           எல்லா கிரகங்களின் பெயரை போல் இல்லாமல் இக்கிரகத்திற்கு கிரேக்க கடவுளின் பெயரைச் சூட்டினார். இக்கிரகத்திற்கு கிரேக்கர்களின் விண்வெளி கடவுளான OURANUSஅவர்களின் பெயரைச் சூட்டினர். காலப்போக்கில் இக்கிரகம் URANUS மாற்றப்பட்டது.


யூரேனஸ் அற்புதம்- Uranus Planet in Tamil

                                              யூரேனஸ் அற்புதம்- Uranus Planet in Tamil

சாய்ந்த கிரகம்:

           URANUS கிரகம் சாய்வாக இருப்பதற்கு காரணம், பூமியை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் கிரகம் வந்து மோதியதால் URANUS கிரகம் சாய்வாக இருக்கலாம், என 2018 னின் ஆய்வில் கண்டறிந்தனர்.

கிரகத்தில் என்ன உள்ளது:

           URANUS கிரகம் பச்சை மற்றும் நீல நிறத்தில் இருப்பதற்கு காரணம் அங்கு மீத்தேன்(METHANE),  ஹைட்ரஜன் (HYDROGEN) மற்றும் ஹீலியம்(HELIUM) வாயுக்கள் அதிகமாக உள்ளதே ஆகும். இக்கிரகத்தின் எடையில் 80 சதவீதம் நீர்(WATER), மீத்தேன்(METHANE), அம்மோனியா ஐஸ்(AMMONIA ICE) ஆகும்.

பருவம், வளிமண்டலம்:

          இக்கிரகம் வித்தியாசமாக உள்ளதால் பூமியின் கணக்கில் இதன் ஒரு பருவ காலம் 20 வாரங்கள் நீடிக்கும். இதனால் இக்கிரகத்தின் ஒரு வருடம் என்றால் அது பூமியின் கணக்கில் 84 வருடங்கள் ஆகும்.

          URANUS கிரகத்தின் வளி மண்டலம் தான் சூரிய குடும்பத்திலேயே மிகவும் குளுமையான வளிமண்டலம் ஆகும். என்னதான் URANUS ,NEPTUNEனை விட சூரியனுக்கு அருகில் இருந்தாலும் URANUS மிகவும் குழுமையான கிரகமாகும். அதற்கு காரணம் அதன் மையப்பகுதியில் இருந்து வெப்பம் குறைவாக வெளியேறுகிறது.

யூரேனஸ் அற்புதம்- Uranus Planet in Tamil
 யூரேனஸ் அற்புதம்- Uranus Planet in Tamil


காந்தபுலம் மற்றும் வளிமண்டலம்:

           எல்லா கிரகத்தின் காந்தப்புலம் அது சாய்ந்திருக்கும் கோணத்துடன் ஒன்று இருக்கும். ஆனால் URANUS னின் காந்தப்புலம் 60 டிகிரி கோணலாக இருக்கிறது. URANUS கிரகத்தின் வளிமண்டலத்தில் 82.5 சதவீதம் ஹைட்ரஜன்(HYDROGEN) 15.2 சதவீதம் ஹீலியம்(HELIUM)  மற்றும் 2.3% மீத்தேன்(METHANE) இருக்கிறது.

இடைவெளி:

           சூரியனிடமிருந்து 290 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அது பூமி மற்றும் சூரியனுக்கு இடையில் உள்ள தொலைவை விட பத்து மடங்கு அதிகமான தொலைவில் உள்ளது.

வைர மழை:

           இக்கிரகத்திலும் வைர மழை பொழிகிறது. அதற்கு காரணம் அதன் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்(CARBON) மற்றும் ஹைட்ரஜன்(HYDROGEN) அதிக அழுத்தினால் அது வைரமாக மாறி மழையாக விழுகிறது.

வளையம்:

          இக்கிரகத்திற்கும் வளையம் உள்ளது. அது சனியின்(SATURN) வளையத்தை கண்டுபிடித்த பிறகு  இக்கிரகத்தின் வளையத்தை கண்டுபிடித்தனர். இக்கிரகத்தின் வளையம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.


யூரேனஸ் அற்புதம்- Uranus Planet in Tamil
 யூரேனஸ் அற்புதம்- Uranus Planet in Tamil


  •  இதன்  உள்பகுதியில் உள்ள வளையம் மிகவும் கருப்பாக இருக்கும்.
  •  அதன் வெளிப்பகுதியில் உள்ள வளையம் சிவப்பு மற்றும் நீல நிறத்தில் இருக்கும்.
 இக்கிரகத்தின் வளையமும் முழுமை அடையாத கிரகம் வெடித்ததால் தான்உருவானது.

நிலவுகள்:

           நமக்குத் தெரிந்தவரை URANUS க்கு 27 நிலவுகள் உள்ளது. அதில் OBERON மற்றும் TITANIA என்னும் நிலவு தான் பெரிதாக உள்ளது.

ஆராய்ச்சி:

           URANUS கிரகத்திற்கு VOYAGER 2  மட்டுமே சென்றுள்ளது. இக்கிரகத்தின் மீது யாரும் ஆர்வம் கொள்ளவில்லை. இக்கிரகத்தை 2030ஆம் ஆண்டு தான் செயற்கைக் கோளை அனுப்ப முடிவு செய்துள்ளனர். இன்னும் இக்கிரகத்தை பற்றி முழுமையான விவரங்கள் தெரியவில்லை.

                                            எதிர்காலத்தில் அறியலாம்........


 

Post a Comment

This is for Space and Science Lovers

Previous Post Next Post