If you want in any other Languages use Google Translate.
Facts about the Moon in tamil
ஹாய் பிரண்ட்ஸ்:
சின்ன வயதில் வானத்தில் சூரியனையும் சந்திரனையும் நிறைய வாட்டி பார்த்து வியந்துஇருப்போம்.
நாம் சின்ன வயதில் நிலவை பார்த்திருப்போம். அது பந்து போல் உருண்டையாக இருக்கும். ஆனால் உண்மையில் நிலவு OVAL வடிவத்தில் தான் இருக்கும் அதாவது பார்ப்பதற்கு முட்டை வடிவத்தில் இருக்கும். பூமியிலிருந்து பார்க்கும் பொழுது உருண்டை வடிவத்தில் தெரியும். ஆனால் பூமியின் புவியீர்ப்பு சக்தியினால் தான் அது OVAL வடிவத்திற்கு மாற்ற பட்டது.
Facts about the Moon in tamil
பூமியின் அளவில் நான்கில் ஒரு பங்குதான்(1/4) நிலவு உள்ளது. சூரிய குடும்பத்தில் பூமியின் நிலவு தான் ஐந்தாவது பெரிய நிலவாகும்.
ஒவ்வொரு வருடமும் நிலவு 3.8 CM பூமியை விட்டு தள்ளிச் செல்கிறது.
Facts about the Moon in tamil
நிலவு சூரியனை விட 400 மடங்கு சிறியதாகவே உள்ளது. ஆனால் நமக்கு இரண்டும் ஒரே அளவில்தான் தெரிகிறது. ஏனென்றால் சூரியனைவிட நிலவு 400 மடங்கு பூமியின் அருகில் இருக்கிறது. இவ்வாறு உள்ளதால் தான் முழுமையான சூரிய கிரகணம் தெரிகிறது.
Facts about the Moon in tamil
நிலவின் புவியீர்ப்பு விசையினால் தான் பூமியில் அலைகள் உருவாகுகிறது.அதனால் தான் முழு நிலவு உள்ள பொழுது அலை பெரிதாக வரும்.
நிலவிற்கு வளிமண்டலம் இல்லாததால்தான் குழுமையும் வெப்பமும் மிக அதிகமாகவே இருக்கும். நிலவில் பகல் நேரத்தில் 127 டிகிரி செல்சியஸில் இருக்கும். ஆனால் இரவு நேரத்தில் மைனஸ் 173 டிகிரி செல்சியஸில் இருக்கும்.
நிலவில் ஒரு நாள் என்றால் அது பூமியில் 29 நாட்களுக்கு சமமாகும்.
பூமியிலிருந்து நிலவை பார்க்கும் பொழுது நமக்கு அதனுடைய ஒரு முகம் மட்டுமே தெரியும். நிலவின் மறு முகம் கரடு முரடாகவும், பல்லமாகவும் இருக்கும்.
Facts about the Moon in tamil
பூமியில் இருந்து நிலவை பார்க்கும் பொழுது நிலவில் பாட்டி வடை சுட்டு கொண்டிருப்பது போல் இருக்கும். ஆனால் அது பாட்டியும் இல்லை வடையும் இல்லை. நானூறு கோடி வருடங்களுக்கு முன்னாடி நிலவில் விழுந்த எரிகற்கள் உருவாக்கிய பள்ளங்கள் இன்னும் அப்படியே இருக்கிறது.
அதனால்தான் பூமியிலிருந்து பார்க்கும்போது அவ்வாறு தெரிகிறது. அவ்வாறு உருவான பள்ளங்களில்AITKEN பள்ளம் தான் மிகப் பெரியது. அந்தப் பள்ளத்தின் நீளம் மட்டுமே 2500 கிலோமீட்டர் இருக்கும். இதன் அள்வு கன்னியாகுமரியிலிருந்து நேபால் செல்லும் அளவிற்கு இருக்கும்.
நிலவிலும் நீர் உள்ளது. ஆனால் அது நிலவின் அடியில் பனிக்கட்டியாக உறைந்துள்ளது. சந்திராயன் செயற்கைக்கோளை அனுப்பி இஸ்ரோ (ISRO) இதனை கண்டறிந்தனர்.
Facts about the Moon in tamil
பூமியில் நிலநடுக்கம் வருவதை போல் நிலவிலும் நில நடுக்கம் வரும். இவ்வாறு நிலவில் வருவதுதான் MOON QUAKEனு சொல்லுவாங்க.
பூமியில் ஆறில் ஒரு பங்கு(1\6) புவியீர்ப்பு விசை மட்டுமே நிலவில் இருக்கும். அதனால் பூமியில் 45 கிலோ எடை உள்ள ஒரு நபர் நிலவில் வெரும் 8 கிலோ மட்டுமே இருபர்.
நிலவிலும் வளிமண்டலம் உள்ளது. அது (HELIUM, NEON, ARGON) போன்ற வாயுகளால் நிறைந்துள்ளது. ஆனால் பத்து லட்சம் கோடி மடங்கு(10000000000000) பூமியின் வளி மண்டலத்தை விட நிலவின் வளிமண்டலம் அடர்த்தி மிகவும் குறைவாகவே உள்ளது.
நம் பள்ளிக்கூடங்களில் சொல்லி கொடுத்தவாறு நிலவு பூமியை சுற்றி வரவில்லை. இரண்டும் ஒரு மையப் புள்ளியையே இணைந்து சுற்றுகிறது. அந்தப் புள்ளியின் பெயர் தான் BARYCENTER.
நிலவில் 200டன்னுக்கு மேலான குப்பைகளை போட்டு இருக்காங்க. அது எப்படின்னு கேட்டா பூமியிலிருந்து நிலவுக்குச் சென்ற மனிதர்கள் மற்றும் அங்கு சென்ற விண்கலங்கள் எல்லாம் நிலவில் குப்பையாக கிடைக்கிறது.
Facts about the Moon in tamil
முதலில் பூமியை குப்பையாக்கினோம் பின் விண்வெளி அடுத்து நிலவையும் குப்பை ஆக்கினோம். பூமியில் உள்ள குப்பையை எடுத்து விடலாம் ஆனால் விண்வெளியில் உள்ள குப்பையை எடுக்க செலவாகும். நாம் இன்னும் பூமியில் உள்ள குப்பையையே எடுக்க வில்லை எப்படி விண்வெளியில் உள்ள குப்பையை எடுப்போம். சிந்தியுங்கள்.....
Watch the video in Youtube for better Understanding
Facts about the Moon in tamil
Thanks for Reading!!!
Follow our Blog for more Interesting Facts and News
Post a Comment
This is for Space and Science Lovers