வியாழனின் வினோதங்கள்- Jupiter Planet Documentary In Tamil- Jupiter Has Rings
If you want it in English or other languages use google translate
|
Jupiter Planet Documentary |
ஹாய் பிரண்ட்ஸ்:
சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கிரகமான வியாழனை பற்றிதான் இந்த BLOG ல பார்க்க போகிறோம்.
பிறப்பு மற்றும் பெயர்:
சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு பிறகு முதலாக தோன்றிய கிரகம் தான் வியாழன். அதனால் இதனை அனைத்து கிரகங்களின் அண்ணன் என்று அழைப்பர். இக்கிரகம் முழுவதுமாக வாயுக்களால் ஆனது. இதற்கும் ஆங்கிலத்தில் ரோம கடவுளின் பெயரையே சூட்டினர். இதற்கு ரோம கடவுளின் ராஜாவான ஜூபிடரின் பெயரைச் சூட்டினார். கிரேகர்கள் இக்கிரகத்திற்கு ஜூஸ் (JUIS) என்ற பெயரை சூட்டினார்.
வியாழனின் அமைப்பு:
|
Jupiter Planet Documentary |
வியாழன் நமக்கு பிரபஞ்சம் செயல்படும் விதியை அறிய மிகப்பெரிய பங்கு வகித்தது. வியாழன் கிரகத்தின் நிறை சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற எல்லா கிரகங்களின் நிறையை விட இரண்டு மடங்கு அதிகமான நிறையைக் கொண்டுள்ளது. இப்போது உள்ளதைவிட வியாழன் 80 மடங்கு அதிக நிறையை கொண்டிருந்தால் அது ஒரு சூரியனாக மாறியிருக்கும். வியாழன் எவ்வளவு பெரிய கிரகம் என்றால் அதனுள் 1300 பூமியை அடக்கிவிடலாம். நாம் வியாழனை (BASKET BALL) என்று எடுத்துக்கொண்டால் அதில் பூமி சிறிய திராட்சை போலவே இருக்கும்.
வைர மழை:
வியாழனின் மையப்பகுதி மிகவும் அடர்த்தியாக இருக்கும். அதன் விட்டத்தில் 80 சதவிதத்தில் இருந்து 90 சதவீதம் வரை அதன் மையப்பகுதி இருக்கும். வியாழன் கிரகத்தில் வைர மழை பொழிகிறது. அதற்கு காரணம் அதன் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்(CARBON) அதிக அழுத்தத்தின் காரணமாக மழையாக மாறும்போது வைரமாக பொழிகிறது. அது கீழே விழும்போது மறுபதியும் கார்பனாக (CARBON) மாறிவிடும்.
பெரிய சிவப்பு இடம் (THE GREAT RED SPOT):
|
Jupiter Planet Documentary in Tamil |
வியாழன் கிரகத்தின் மிகப்பெரிய அதிசயம் என்றால் அது(THE GREAT RED SPOT). இதுதான் பிரம்மாண்டமான சுறாவழியாகவும். இது 300 வருடங்களாக வியாழனைச் சுற்றி வருகிறது. இந்த சூறாவளியின் அகலம் மட்டும் 2 பூமியின் அகலத்தை விட அதிகமாகவே இருக்கும். அதன் நிறம் சிவப்பு மற்றும் பளுப்பு நிறம் கலந்தாக இருக்கும். இந்த சூறாவளி சுருங்கிக்கொண்டே வருகிறது. இப்போது இதன் சுருக்கம் வேகம் குறைந்துள்ளது.
காந்தபுலம் மற்றும் கதிர்வீச்சு:
வியாழனின் காந்தப்புலம் எல்லா கிரகத்தின் காந்தப்புலத்தை விட மிகவும் சக்தி வாய்ந்தது. பூமியின் காந்தப்புலத்தை விட வியாழனின் காந்தப்புலம் 2000 மடங்கு அதிகமாக இருக்கும். வியாழன் கிரகம் அதிகமான கதிர்வீச்சை வெளியிடும். இக்கிரகத்தின் கதிர்வீச்சு அதன் நிலவிற்கு வரும்போது மனிதனின் பாதுகாப்பு அளவினை மீறி ஆயிரம்(1000) மடங்கு இருக்கும். அது அங்கு செல்லும் விண்கலங்களை செயலிழக்க வைத்து விடும்.
வேகமாக சுற்றும் வியாழன்:
வியாழன் தன்னைத் தானே மிகவும் வேகமாகச் சுற்றுகிறது. பூமியின் கணக்கில் பெறும் 10மணி நேரத்தில் வியாழன் தன்னை தானே சுற்றி விடும். வியாழன் மிகவும் வேகமாக சுற்றுவதால் அதன் ஈக்வேடார்(EQUATOR) மிகவும் வீங்கிப் போய் உள்ளது . அதன் தென்துருவம் மற்றும் வடதுருவம் சப்பையாக உள்ளது. வியாழனால் உருவாக்கப்படும் RADIO WAVES பூமியை வந்து அடையும் அளவிற்கு மிகவும் பலமாக இருக்கும்.
வியாழனின் நிலவுகள்:
|
Jupiter Planet Documentary in Tamil |
வியாழனுக்கு மொத்தமாக 79 நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் நான்கு மட்டுமே மிகப்பெரிய நிலவாகும். மீதி உள்ள எல்லா நிலவுமே சிறிதாகவே இருக்கும். அந்த பெரிய நிலவுகளில் பெயர் IO, EUROPA, GANYMEDE, CALLISTO. GANYMEDE என்னும் நிலவு தான் சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய நிலவாகும். இதன் அளவு புளுடோ (PLUTO) மற்றும் மெர்குரியின் (MERCURY) அளவை விட மிகவும் பெரிதாக இருக்கும். இன்நிலவுகளில் பணிக்கட்டிலாகவும் கீழே கடலாகவும் இருக்கும்.
வியாழனின் வளையம்:
நமக்கு தெரியும், சனி கிரகத்திற்கு வளையம் உள்ளது. ஆனால் வியாழனுக்கும் வளையம் உள்ளது. சனி கிரகம் சூரிய ஒளியை அதிகமாக பிரதிபலிப்பதால் அதன் வளையம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் வியாழன் கிரகத்தின் வளையம் மிகவும் குறைவாக பிரதிபலிப்பதால் அது விண்வெளியில் மறைந்துவிடுகிறது. என்னதான் பெரிய கிரகமாக இருந்தாலும் பூமியை போல் வராது. நம்மை வாழவைக்கும் பூமியை நாம் வாழ வைக்க வேண்டும்
Watch the video in Youtube for better Understanding
إرسال تعليق
This is for Space and Science Lovers