சனி கிரகத்தின் அழகு
(Saturn Planet Documentary in Tamil)
If you want it in English or other languages use google translate
Saturn Planet Documentary in Tamil |
ஹாய் பிரண்ட்ஸ்:
சூரியனிடமிருந்து ஆறாவதாக உள்ள கிரகம் சனியாகும். அதோடு சனி தான் இரண்டாவது மிகப் பெரிய கிரகமாகவும்.என்னதான் மிகத் தொலைவில் இருந்தாலும் இரவில் இக்கிரகத்தை வெறும் கண்களால் காணமுடியும்.சனி என்றாலே அதன் வளையம் தான் நினைவிற்கு வரும். என்னதான் மற்ற எல்லா வாயுகோட்களுக்கும் வளையம் இருந்தாலும் இதன் வளையம் மட்டுமே பிரபலமானது. இக்கிரகதிற்கு மற்றொரு பட்ட பெயரும் உண்டு. அந்தப் பெயர் தான் வளையத்தை கொண்ட கிரகம் என்பதாகும்.
Saturn Planet Documentary in Tamil |
சனி கிரகம் வாயுகோட்களில் ஒன்றாகும். இக்கிரகம் பெரும்பாலாக (HELIUM) மற்றும் (HYDROGEN) வாயுகளால் நிறைந்துள்ளது. சனியின் அளவு 770 பூமியை விட அதிகமாக உள்ளது. மேலும் இது சூரியக் குடும்பத்தில் கனமான கிரகங்களில் இதுவும் ஒன்றாகும். பூமியின் எடையை விட சனியின் எடை 95 மடங்கு அதிகமாக இருக்கும். சூரிய குடும்பத்தில் சனி கிரகம் தான் மிகவும் அடர்த்தி குறைவான கிரகமாகும். சனிக்கிரகத்தை நீரில் போட்டால் அக்கிரகம் நீருக்கு மேல் மிதக்கும்.
Saturn Planet Documentary in Tamil |
சனியின் வளிமண்டலத்தில் காணப்படும் மஞ்சள் மற்றும் தங்க பட்டைகளுக்கு காரணம் அங்கு அதிவேகமாக காற்று சுற்றுகிறது.அதன் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 1,200 கிலோ மீட்டர் தூரம் செல்லும். சனி தன்னைத்தானே 10.5 மணி நேரத்தில் சுற்றுவதால் அதன் EQUATOR வீங்கியும் அதன் தென்துருவம் மற்றும் வட துருவம் சப்பையாகவும் உள்ளது.GALILEO தான் முதன்முதலாக 1610தில் சனிக்கிரகத்தின் வளையத்தை காணொளி வைத்து கண்டறிந்தார். பின் நிறைய விஞ்ஞானிகள் அதனை ஆராய்ந்தனர் சனி கிரகத்திற்கு நிறைய வளையல்கள் உண்டு. அது எல்லாம் ஆயிரம் வருடங்கள் பழமையான கற்களாகவும், பனிக்கட்டிகளாகவும் இருக்கும். இப்போதைய ஆராய்ச்சிப்படி இவ்வளையம் ஒரு முழுமையடையாத கிரகம் வெடித்ததால் உருவாகி இருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இதன் வளையம் மிகமிகப் பெரிதாக இருக்கும். ஆனால் நாம் புகைப்படங்களில் காணும் வளையம் இதன் உள்பகுதியில் உள்ள வளையம் மட்டுமே. அதன் வெளிப்பகுதியில் உள்ள வளையம் மிக மிகப் பெரிதாக உள்ளது. அதன் அகலம் மட்டுமே கோடிக்கணக்கான பூமியின் அகலத்தை விட பெரியதாக இருக்கும். சனி கிரகத்திற்கு குறைந்தபட்சம் 62 நிலவுகள் இருக்கும். அந்த நிலவுகளில் டைட்டன்(TITAN) என்னும் நிலவுதான் மிகப்பெரிதாக இருக்கும்.
இது மெர்குரி (MERCURY) கிரகத்தை விட மிகவும் பெரிதாக உள்ளது. அது தான் சூரிய குடும்பத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய நிலவாகும். மீதி உள்ள நிலவுகள் அனைத்தும் வித்தியாசமாகவும், வினோதமாகவும் இருக்கும்.சனிக்கு அது போல நிறைய சின்ன சின்ன நிலவுகளும் இருக்கும். ஆனால் அது எல்லாம் உருவாகிய சிறிது காலத்தில் மற்றொரு நிலவுடன் மோதி அழிந்து விடுகிறது. சூரிய குடும்பத்திலேயே சனி கிரகம் தான் மிக முக்கியமான கோளாகும். ஏனென்றால் வியாழன் ஓடு சேர்ந்து எரிகற்களை சரியான சுற்றுப்பாதையில் செல்ல உதவி புரிகிறது. PIONEER11 என்னும் செயற்கைக்கோள் தான் சனி கிரகத்திற்கு முதல் முதலாக 1973 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது. CASSINI வின்கலத்தின் அனுப்பப்பட்ட HUYGENS PROBE வெற்றிகரமாக TITAN நிலவில் தரையிறங்கியது.
என்னதான் சனிக்கிரகம் அழகாக இருந்தாலும்
அது பூமியின் அளவிற்கு ஈடாகாது.
إرسال تعليق
This is for Space and Science Lovers