If you want in English or any other Language use Google Translate
புதனின் மகிமை- Mercury Planet in Tamil |
ஹாய் பிரெண்ட்ஸ்:
நாம் இரவில் வானத்தை பார்க்கும் போது பளிச்சென்று தெரியும் கிரகங்களில் ஒன்று தான் புதன். சூரியனுக்கு அருகில் உள்ள புதனைப் பற்றி தான் இந்த BLOG ல பார்க்க போறோம்.
பெயர் வந்த கதை:
புதனை ஆங்கிலத்தில் MERCURY என அழைப்பார்கள். பொதுவாகவே எல்லா கிரகத்துக்கும் கடவுளின் பெயரையே சூட்டிவர். நம் இந்திய கலாச்சாரத்திலும் அவ்வாறே பெயர் சூட்டப்பட்டது. ஆங்கிலத்தில் மெர்குரி(MERCURY) என அழைக்கப்படும் இப்பெயர் ரோம கடவுளின் தூதுவரான மேற்கூறி(MERCURY) என்னும் நபரின் பெயரையே இக்கிரகத்திற்கு சூட்டினர்.
புதனின் மகிமை- Mercury Planet in Tamil |
புதனின் அளவு:
இப்பொழுது இருக்கும் கணிப்புப்படி சூரிய குடும்பத்திலே புதன் தான் மிகச் சிறிய கிரகமாகும். அதன் அளவை 4850 கிலோமீட்டர் மட்டுமே இருக்கும். இதன் மொத்தப் பரப்பளவு UNITED STATES OF AMERICA வின் பரப்பளவை இருக்கும்.
புதனின் அமைப்பு:
பூமி, செவ்வாய் போன்ற கிரகங்கள் போலவே புதனும் கற்களால் ஆன கிரகம் ஆகும். பிற கிரகங்களை போல புதனிலும் மூன்று அடுக்குகள் உள்ளது. அதாவது (CORE,MANTLE AND CRUST). ஆனால் பூமியில் உள்ளதைப் போல புதனில் TECTONIC PLATES இல்லை. அதனால் புதனில் சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்கள் வராது.
கரைந்து வரும் புதன்:
புதனின் மையப்பகுதி 85 சதவிதம் உள்ளது. ஆனால் பூமியின் மையப்பகுதி 55 சதவீதம் மட்டுமே உள்ளது. மிகப்பெரிய மையப்பகுதியை கொண்டதால் தான் பல கோடி வருடங்களாக சுருங்கிக்கொண்டே வருகிறது. இவ்வாறு சுருங்கிக் கொண்டே இருக்கும் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் இருக்கிறது.
வலித்தெடுக்கப்பட்ட வளிமண்டலம்:
புதனுக்கும் சூரியனுக்கும் உள்ள இடைவெளி 59 மில்லியன் கிலோமீட்டர் ஆகும். என்னதான் இது நமக்கு பெரிய தொலைவாக இருந்தாலும் அது விண்வெளியில் மிகச் சிறிய இடைவெளியே ஆகும்.
சூரியனின் அருகில் உள்ளதால் தான் இதன் வளிமண்டலம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது கிட்டத்தட்ட இல்லை. அது ஆக்சிஜன்(OXYGEN), ஹைட்ரஜன்(HYDROGEN), ஹீலியம்(HELIUM) போன்ற வாயுக்களால் நிறைந்துள்ளது. இதன் வளிமண்டலம் சூரிய காற்றினால் வலித்தெடுக்கப்பட்டுள்ளது. இது எல்லாம் ஒன்று கூடி மிகக்கொடுமையான கிரகமாக மாறியது.
புதனின் மகிமை- Mercury Planet in Tamil |
வெப்பம் மற்றும் சுற்றும் வேகம்:
காலை நேரத்தில் இதன் வெப்பம் 427 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அப்படியே மாறாக இரவு நேரத்தில் மைனஸ் 173 டிகிரி செல்சியஸில் இருக்கும். மற்ற எல்லா கிரகங்களைப் போலவே ஒரு நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது.
மற்ற எல்லா கிரகங்களை விட புதன் சூரியனை மிக வேகமாக சுற்றுகிறது. இக்கிரகம் ஒரு மணி நேரத்திற்குள் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து தொள்ளாயிரத்து 34 (160934) கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது. இதனால் சூரியனை வெறும் 88 நாட்களில் வலம் வருகிறது.
ஆராய்ச்சி மற்றும் செயற்க்கோள்:
இது சூரியனுக்கு மிக அருகில் உள்ளதால் இதை வெறும் கண்களால் காண்பது கடினம். இதுவரை இக்கிரகத்தைத் 2 செயற்கைக்கோள்கள் படம்பிடித்துள்ளது. நாம் இன்று அறிந்தது எல்லாம் செயற்கைக்கோள்கள் மூலம் அறிந்தவையே ஆகும். அந்த செயற்கை கோள்களின் பெயர்கள் MARINER 10 மற்றும் MESSENGER ஆகும். இன்னும் இக்கிரகத்தின் மர்மங்கள் தெரியவரவில்லை.
எதிர்காலத்தில் அதனை கண்டு பிடிப்போம்......
إرسال تعليق
This is for Space and Science Lovers