Translate


ஹாய் பிரண்டஸ்: 

          நிலவை தான் சூரிய குடும்பத்திலேயே அதாவது பூமியை தவிர அதிகமாக ஆராய்ச்சி செய்யப்பட்ட கோள்.

கருத்து:

           முதலில் முன்னோர்கள் கண்களால் கண்டு வியந்தனர்; பிறகு தொலைநோக்கியை வைத்துப் பார்த்தனர்; அடுத்து செயற்கைக்கோளை அனுப்பி ஆராய்ந்தனர்; அதன்பின் நிலவின் மீது காலையும் பதித்தனர்

பல பல யூகங்கங்கள்:

           சூரியன் உருவான பிறகு ஒவ்வொரு கிரகங்களாக உருவாகத் தொடங்கியது. பூமி உருவாகி 10 கோடி வருடங்களுக்கு அடுத்து தான் நிலவு  உருவானது.  நிலவு எப்படி உருவானது என பல யூகங்கள் உள்ளது. அதில் ஒரே ஒரு யூகம்தான் எல்லாராலும் நம்பப்படுகிறது. அந்த யூகத்தை பற்றி தான் இந்த BLOG ல பார்க்கப் போறோம்.


இரக்கம் இல்லாத சூரிய குடும்பம்:

           முதலில் சூரிய குடும்பம் இரக்கம் இல்லாத ஒரு இடமாகவே இருந்தது. அப்பொழுது தான் பூமி போன்ற கிரகங்கள் உருவானது. ஆனால் அதில் எதுவுமே முழுமை அடையவில்லை. அப்போது உருவான கிரகங்களில் ஒன்று தான் தீயா  கிரகம். 

தியா கிரகம் தான் நிலவு:

          அதனின் அளவு இப்பொழுது இருக்கும் செவ்வாயின் அளவில்தான் இருக்கும். இவ்வளவு பெரிய கிரகம் பூமி ஆரம்ப நிலையில் இருந்தபோது வந்து தாக்கியது.  டைனோசரஸ்(DINOSAURS) அழிய காரணமாய் இருந்த ஏரிகற்களில் இருந்து வெளிவந்த எனர்ஜியை((ENERGY) விட பத்துக்கோடி மடங்கு அதிகமான எனர்ஜி(ENERGY) இந்த கிரகம் மோதியதால் வெளியானது. 

 நிலவில் பிறப்பு:

          இக்கிரகங்கள் மோதியதால் தியாவின் மேல்பகுதி அதாவது (CRUST) விண்வெளியில்  சிதறியது. சிதறிய கற்கள் புவியீர்ப்பு விசையினால் ஒன்று சேர்ந்து நிலவாக மாறியது.

மிகப் பெரிய நிலவு:

           சூரிய குடும்பத்திலே பூமியின் நிலவு தான் மிகப் பெரியது. எவ்வாறென்றால் தான் சுற்றும் கிரகத்தை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது மற்ற கிரகங்களின் நிலவை விட பூமியின் நிலவே மிகப் பெரியதாகவே தெரியும்.


ஆடர்த்தி இல்லாத நிலவு:

           நிலவின் அடர்த்தி மிகவும் குறைவாகவே உள்ளது. ஏனென்றால் தீயா கிரகத்தின் மேல் பகுதி தான் விண்வெளியில் சிதறியது. அது எல்லாம் சேர்ந்துதான் நிலவு உருவானது. அதனால் தான் நிலவு அடர்த்தியாக இல்லை. இந்த யூகம் தான் எல்லாராலும் நம்பப்படுகிறது.

இதிலும் பிரச்சனை:

           ஆனாலும் இதிலும் ஒரு பிரச்சனை உள்ளது. என்னவென்றால் 60% நிலவு தியா கிரகத்திலிருந்து உருவாகியிருக்கும் 40% பூமியில் இருந்து உருவாகி இருக்கும். ஆனால் நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக நிலவின் மண்ணை எடுத்து வந்து அதனை சோதித்துப் பார்க்கும் பொழுது அந்த யூகத்தில் கூறியவாறு இல்லை.

          மீதி உள்ள யுகங்களில் நிறைய கேள்விகளும் குழப்பங்களும் உள்ளது. ஆனால் இந்த யூகத்தில் மட்டுமே ஓரளவு அறிவியல் சான்றுகளுடன் ஒன்றிப் போகிறது.


இதுவரை தெரியாத ரகசியம்:

          நிறைய பேருக்கு தெரியாத உண்மை என்னவென்றால் ஒவ்வொரு வருடமும் நிலவு பூமியை விட்டு 3.8 சென்டிமீட்டர் தள்ளிச் செல்கிறது. சூரியனைவிட நிலவு 400 மடங்கு சிறியதாகவே உள்ளது.

           ஆனால் நமக்கு இரண்டும் ஒரே அளவில் தான் தெரிகிறது. ஏனென்றால் சூரியனைவிட நிலவு 400 மடங்கு பூமியின் அருகில் இருக்கிறது. இவ்வாறு உள்ளதால் தான் முழுமையான சூரிய கிரகணம்(SOLAR ECLIPSE) நமக்குத் தெரிகிறது...


Keywords:
Formation of the Moon
Origin of the Moon
Moon Facts in Tamil
Moon Tamil
About moon in Tamil
Moon Tamil meaning
Chandhrayan 2
Nasa
Vikram Lander
Chandrayaan  2

Post a Comment

This is for Space and Science Lovers

أحدث أقدم