Translate

  புதிரான புளோட்டோ-Pluto planet in Tamil- Pluto Heart

If you want it in English or other languages use google translate


Pluto Heart
Pluto Heart

ஹாய் பிரண்ட்ஸ்:

              புளோட்டோ  (PLUTO)  தான்  சூரிய குடும்பத்திலேயே  இதற்கு  முன்னாடி  9 வது கிரகமாக இருந்தது.   சூரியனிடமிருந்து  மிகத் தொலைவில் அமைந்த கிரகமும் இதுதான்.  ஆனால்  இப்பொழுது  சூரிய  குடும்பத்திலேயே  மிகப்  பெரிய  தோல்வி  அடைந்த  கிரகம்  ஆகும்.

       கியூப்பர் பெல்ட்டில்(KUIPER BELT) உள்ள  கிரகங்களில்  இதுவே  மிகப்  பெரிய  கிரகமாகவும்.KUIPER BELT என்றால் நெப்டியூன் கிரகத்தை தாண்டி உள்ள ஏறி கற்களால் ஆன ஒரு மிகப் பெரிய வளையமாகும்.   இக்கிரகத்தை 2006 ஆம் ஆண்டு கிரகம் இல்லை என்று அறிவித்தனர். இது  நிறைய  விவாதங்களுக்கும்  குழப்பங்களுக்கும்  வழிவகுத்தது.   

பெயர் வைத்த கதை:

Pluto Heart
Pluto Heart


           PERCIVAL LOWELL  என்னும்  நபர்  PLUTO  கிரகத்தைக்  1905  ஆம் ஆண்டு  இருக்கும்  என யூகித்தார். ஆனால் அவர் 1915 ஆம் ஆண்டு கண்டுபிடிக்காமல்  இறந்துவிட்டார். பின்  PLUTO கிரகத்தை  1930  ஆம்  ஆண்டு CLEDE TOMBAUGH  என்பவர்  இக்கிரகத்தை  கண்டறிந்தார். இக்கிரகத்திற்கு  11 வயதே  ஆன  ஒரு  சிறுமி தான்  பெயர் வைத்தாள் . அவள் ரோம கடவுள்களில்  பாதாளத்தில்  கடவுளான  PLUTO வின்  பெயரை  வைத்தால்.

புளோட்டோ பற்றி ஆராய்ச்சி:

Pluto Heart
Pluto Heart


            இக்கிரகம் பூமியிலிருந்து  மிகத்  தொலைவில்  உள்ளதால்  அதன்  அளவு  மற்றும்  மற்ற செயல்பாடுகளை  அறிவது  கடினம்.  நாசாவின் புதிய HORIZON  என்னும் SPACE PROBE தான்  PLUTOவின்  அருகில்  சென்றது.  இதன்  மொத்த  நீளம்  மட்டுமே  2370 கிலோ  மீட்டராகும். இது பூமியில் நீளத்தில் ஐந்தில் ஒரு பங்கே ஆகும். NASA வின்  இந்த SPACE PROBE தான்  PLUTOவின் மர்மங்களை   தெளிவுபடுத்தியது. 

புளோட்டோவின் மலைகள்:

          PLUTO வில்  உள்ள  மலையின்  உயரம்  35000 மீட்டருக்கு  மேல்  இருக்கும். ஆனால் அங்குள்ள METHANE  மற்றும்  NITROGEN னால் ஆன பனியினால் இவ்வளவு கனத்தைத் தாங்க முடியாது. அதனால் அது நிச்சயமாாக நீரினால்  ஆன பனிக்கு மேல் தான் இருக்க வேண்டும். PLUTOவின் நிலப்பரப்பில் METHANE ICE தான் மிகுதியாக இருக்கும். 

புளோட்டோவின் இதயம்:

Pluto Heart
Pluto Heart


          PLUTOவின்  அமைப்பும் அம்சமும் வினோதமாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. அதில் மிகப்பெரிய அதிசயம் என்றால் அது அதன் இதயம் (HEART)தான். இது PLUTO வில்  ஒரு மிகப் பெரிய பகுதியாகவே இருந்து வருகிறது.இதன் பெயர் தான் TOMBAUGH REGIO.இதன் இடது புறத்தில் CARBON MONOXIDEசாகவும் மற்றது எல்லாம் வித்தியாசமாகவும் இருக்கிறது. நிறைய வகையான தாது பொருட்கள் அதன் இதயத்தின் உள்ளயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிலப்பரப்பும் அமைப்பும்:

          இக்கிரகத்தின் பறப்பில் நிறைய பள்ளத்தாக்குகள் உள்ளது. அது எல்லாம் எரிக்கற்கள 10 கோடி வருடங்களுக்கு முன்பு மோதியதாகவும். நாசாவின் HUBBLE TELESCOPE புளூட்டோவின் மேற்பரப்பில் மிகவும் சிக்கலான மூலக்கூறுகள் இருக்கிறது என உறுதிசெய்யப்பட்டது.

அடுத்த பூமி:

            PLUTOவின் மேற்பரப்பு சூரிய குடும்பத்தின் குளுமையான இடங்களில் ஒன்றாகும். இங்கு -225டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்கும். PLUTO கிரகத்தில் இதற்கு முன்னாடி பெருங்கடல் இருந்திருக்கலாம். ஆனால் இன்று வெறும் பணி மட்டுமே உள்ளது. ஆனால்  PLUTO வில் திரவ நிலையில் நீரும் தேவையான சக்தியும் இருந்தால் அதனை இரண்டாவது பூமியாக மாற்றி இருக்கலாம். 

ஆமை வேக புளோட்டோ:

          இக்கிரகம் மிகவும் நீள்வட்டப்பாதையில் சுற்றுவதால் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள இடைவெளியை விட 49 மடங்கு அதிக இடைவெளி தள்ளி உள்ளது. இது ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 248 வருடங்கள் எடுத்துக் கொள்ளும்.  PLUTOவின் காந்தப்புலம் பூமியின் காந்தப் புலத்தில்  20 பதில் ஒரு பங்கு மட்டுமே இருக்கும்.

புளோட்டோ எதால் உருவானது?:


           PLUTOவின் வளிமண்டலம் மிகவும் அடர்த்தி குறைவாக இருக்கும். ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இதன் வளிமண்டலம் செவ்வாயின் வளி மண்டலத்தை விட 40 மடங்கு அதிகமாக இருந்திருக்கலாம். இதன் வளிமண்டலம் METHANE மற்றும் NTROGEN வாய்களால் ஆனதே ஆகும். இதற்கு காந்தப்புலம் உள்ளதா என்று இன்றும் தெரியவில்லை. இக்கிரத்தில் 70% பாறைகளாகவும் மீதியுள்ள 30% பனியினால் அதே ஆகும்.

புளோட்டோவின் நிலவுகள்:

Pluto Heart
Pluto Heart

          புளோட்டோவுக்கும் 5 நிலவுகள் உள்ளது.அதில் CHARON என்னம்
 நிலவு தான் மிகப் பெரியது. இன் நிலவு கிட்டத்தட்ட PLUTO வில் பாதி அளவு இருக்கும். இதனால் CHARON, PLUTO கிரகத்தை சுற்றி வராமல் இரண்டும் ஒரு மையப் புள்ளியையே இனைந்து சுற்றுகிறது. அதனால் இதனை BINARY SYSTEM என்று கூறுவர்.

     புளோட்டோ கிரகத்திற்கு கூட இதயம் இருக்கு ஆனால்
       மனிதர்களான நமக்கு இதையமே இல்லை.     

 

Watch the video in Youtube for better Understanding

  

Post a Comment

This is for Space and Science Lovers

Previous Post Next Post